March 26, 2023 11:25 pm

தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக பெருமளவு மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்ததாவது:-

“நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளுவதற்கே அரசு முயக்கின்றது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

மின் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. இதனால் பல தொழில்சாலைகள் மூடப்படும். பொருளாதாரம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசு நிச்சயம் படுதோல்வியைச் சந்திக்கும்.

நிலையான அரசு இருந்தால் மாத்திரமே இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன.

அந்த நிலையான ஆட்சி அமைவதற்கு தேர்தல் அவசியம். ஆனால்,தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் எனப் பயந்து அரசு தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்கின்றது.

அதற்குப் பயந்து அரசு தேர்தலை ஒத்திப்போட்டால் இலட்சக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிப் போராடுவோம்” – என்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்