81வயதிலும் அயராது மருத்துவசேவை புரிந்துவருகிறார் வைத்தியர் அருளானந்தம் அவர்கள். அவரின் கதை இதோ..!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அவர்.
அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.
இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள் மற்றும் தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறார்.
இவரைப்பற்றி வெளியான காணொளி ஒன்றில் “இவர் ஒரு மனிதக் கடவுள்” “ஐயாவிடம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குகிறார்” போன்ற பல பின்னூட்டங்களைக் காணமுடிந்தது.
இவர் சேவை மனப்பாங்கோடு உழைப்பதற்கு வயது தடை இல்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கிறார்.
வாழ்த்துக்கள் ஐயா
பிரத




நன்றி – இணையம்