இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாக கும்பம் வைக்கும் நிகழ்வு ஒன்று யாழில் இடம்பெற்றது.
இன்று யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம் விளக்குகள், வாழையிலை மற்றும் மேசைவிரிப்பு என்பன தனி அழகாக இருந்தது.
அங்கு வந்திருந்தவர்கள் இக் கும்பத்தை ஆச்சரியத்தோடு பார்த்தனர். இயற்கை உற்பத்திகளால் அமைத்த கும்பத்தை தமது நிகழ்வுகளில் வைத்துக்கொள்ளவும் ஆர்வம் தெரிவித்தனர்.





