0
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்படாது என்றும் தற்போதைய விலையே தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையினால் எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டும்.
இருப்பினும் பாவனையாளர்கள் நலன்கருதி எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.