செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சியில் திருடன் மடக்கிப் பிடிப்பு!

வடமராட்சியில் திருடன் மடக்கிப் பிடிப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் நீண்ட காலமாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டு வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்கள், தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, இரண்டு பவுண் தங்கச் சங்கிலிகள் இரண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.