செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக் கட்டணம் குறைப்பு!

கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக் கட்டணம் குறைப்பு!

0 minutes read

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகின்றது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாகக் குறைக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.