செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘லிட்ரோ’ எரிவாயு விலை அதிரடியாகக் குறைப்பு!

‘லிட்ரோ’ எரிவாயு விலை அதிரடியாகக் குறைப்பு!

0 minutes read

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை மூவாயிரம் ரூபாவுக்குள் மட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விலை குறைக்கப்படும் அளவு தொடர்பில் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 281 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது.

அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.