செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அறநெறி வகுப்புக்களில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்!

அறநெறி வகுப்புக்களில் மாணவர் பங்கேற்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்!

0 minutes read

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலர்களுடன் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 9 வரையுள்ள மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படக்கூடாது. அதேபோன்று சூம் ஊடான வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள் என்பனவும் நடைபெறக்கூடாது. அதை பிரதேச செயலர்கள் கண்காணிக்க வேண்டும். அறநெறி வகுப்புக்கள் கிராமங்களில் நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டும். இதுவரை அறநெறி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்காவிட்டால் அதனை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் கலை நிகழ்வுகளில் மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவும் வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.