செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லொறி – ஹயஸ் விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

லொறி – ஹயஸ் விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

0 minutes read

வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் பயணித்த லொறியொன்றும் ஹயஸ் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயது இளைஞரும், வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 24 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

ஹயஸ் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலும், அவருடன் பயணித்த மற்றைய இளைஞர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.