பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தவர் லொறி மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா – ரதல்ல பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ரதெல்ல, சர்செட் தோட்டத்தின் லாண்டேல் பிரிவில் வசித்து வந்த ராஜு கிருஷ்ணகுமார் (வயது – 33) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
வேலைக்குச் செல்வதற்காக அவசர அவசரமாகப் பாதசாரிக் கடவையில் கடந்த அவரை, அதிவேகமாக வந்த லொறி மோதித் தள்ளியுள்ளது. படுகாயமடைந்த நிலையில், அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள நானுஓயா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.