செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை!

மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை!

1 minutes read

மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என்று களுத்துறை – தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடிப் பார்த்தபோது அயல் வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.

பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளார் எனவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும் கொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைச் சந்தேகநபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.