December 7, 2023 12:19 pm

யாழில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்குள்ளான நபர் உயிர்மாய்ப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 3ஆம் திகதி காரைநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது குறித்த சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

அவ்வேளை அவர் காப்பாற்றப்பட்டு  காரைநகர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்