September 25, 2023 6:37 am

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரையில்  சடலமொன்று கரையொதுங்கியுள்ளது எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட 5 அடி 5 அங்குல உயரத்துடனும், மெலிதான உடலுடனும், மஞ்சள் நிற அரை கைச்சட்டையுடனும், சாம்பல் நீளமான காற்சட்டையுடனும், வெள்ளை முடியுடன் காணப்படுகின்றார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்