December 7, 2023 8:45 pm

வடக்கு, கிழக்கில் திலீபன் நினைவேந்தலுக்குத் தடை வேண்டுமாம்! – ‘மொட்டு’ வலியுறுத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராகக் கொழும்பில் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கிலும் நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் வன்முறைகள் வெடித்து இன நல்லிணக்கமும், மத நல்லிணக்கமும் சீர்குலையும்.”

– இப்படிக் கூறியுள்ளது ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“என்னதான் தியாகத்தைத் திலீபன் செய்தாலும் அவர் ஓர் பயங்கரவாதி. அவரைக் கொழும்பில் நினைவேந்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அதேபோல் மூவின மக்களின் ஒற்றுமையைக் கருதி வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட அனைத்து நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

சிங்கள மக்கள் மீண்டுமொரு வன்முறையை விருப்பவில்லை; போரை விரும்பவில்லை. தமிழ் அரசியல்வாதிகள்தான் சிங்கள மக்களைச் சீண்டும் வகையில் செயற்படுகின்றார்கள். அப்படி அவர்கள் செயற்படும்போது சிங்கள மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்