December 8, 2023 2:11 pm

இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ வைத்தியசாலையில் நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று சூரியவெவ பொலிஸார் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சடலத்தைப் பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் இரத்தம் கசிந்துள்ளது என்றும், இது சந்தேகத்துக்குரிய மரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்