December 10, 2023 5:17 pm

மைத்திரி உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சத்தியக் கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டை முழுமையாக வழங்க இவர்கள் தவறியுள்ளனர்.

இந்நிலையிலேயே சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களைச் சத்தியக் கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்