December 7, 2023 1:18 am

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்ஸின் சாரதி உயிரிழந்தார்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பலத்த மழை காரணமாக  ரங்கல பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த பாலத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவர் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்தெனிய டிப்போவில் சாரதியாக கடமையாற்றிய 50 வயதான ரங்கல பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ரங்கல போகஹகும்புர ஓயாவுக்கு வந்த போது பாலம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடக்க முற்பட்டபோதே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்