செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “மஹிந்த சூறாவளி” ஆரம்பமான இடத்தில் விமல் அணியின் கூட்டம்!

“மஹிந்த சூறாவளி” ஆரம்பமான இடத்தில் விமல் அணியின் கூட்டம்!

0 minutes read

தெற்கில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.  சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்தவின் எழுச்சிப் பயணம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது. மஹிந்த சூறாவளி எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது மக்கள் கூட்டம் மஹிந்த தலைமையில் நுகேகொடையில் இருந்துதான் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.