செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லிந்துலையில் 10 வயது சிறுவனுக்கு சித்திரவதை : சிறிய தாய்க்கு விளக்கமறியல் 

லிந்துலையில் 10 வயது சிறுவனுக்கு சித்திரவதை : சிறிய தாய்க்கு விளக்கமறியல் 

0 minutes read

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டதோடு, அந்த பெண்ணை மனோதத்துவ வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தி, அப்பரிசோதனை அறிக்கையையும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவானால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.