செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போர்க் குற்றவாளிகளை நான் கண்டறிவேன் நீதிமன்றங்கள் தண்டிக்கும் | அநுரகுமார

போர்க் குற்றவாளிகளை நான் கண்டறிவேன் நீதிமன்றங்கள் தண்டிக்கும் | அநுரகுமார

0 minutes read

போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும் இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த செவ்வியை மேற்கோள் காட்டி, ‘இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று யாழில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, ‘இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்’ என்று அநுர தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.