செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை முடங்கும் அபாயம்!

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை முடங்கும் அபாயம்!

1 minutes read

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகளால் மருத்துவமனையின் இயங்குதிறன் முற்றாகப் பாதிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில தன்னார்வலர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, இன்றுவரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப் போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்குகின்றது. ஆயினும் ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சகப் போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக வலைத்தளங்களினூடான வசைபாடல்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது.

அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுகின்றது என்று எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது.

சவாலுக்கு உரிய இந்தச் சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல; நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலையை ஏற்படுத்தும். மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல், ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது.

தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயற்படுகின்றன என்பதையும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்கின்றன என்பதையும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன், உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை கிளை புற்றுநோய் நிபுணர் மருத்துவர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

தெல்லிப்பழை மருத்துவமனை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச மருத்துவமனையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாள்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனிநபர்களைக் காப்பதல்ல; நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.