செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் | சுரேஷ் பிரேமச்சந்திரன்!

எதற்காக போராடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் | சுரேஷ் பிரேமச்சந்திரன்!

1 minutes read

எமது மக்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் கட்சிகாக போராடவில்லை எதற்கான போராட்டம் என்பதை புரிந்து கொண்டால் சரி என ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் பங்காளி கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04)  நடாத்திய ஊடக சந்திப்பின்போது போராட்டம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் முடிவுகளை எடுத்துவிட்டு அழைப்பு விடாதீர்கள் வரவும் மாட்டோம் என கூறியமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரவிக்கையில்,

எல்லோரும் எல்லாவற்றையும் பேசி எல்லோருடனும் செய்துவிடமுடியும் என்றில்லை பாதிக்கபட்ட மக்களுக்காக பல அமைப்புகள்,சிவில் சமூக அமைப்புகள் போராடிவருகிறார்கள்.

குறிப்பாக சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளுக்காக குரலற்றவர்களின் அமைப்பு போராடிவருகிறார்கள் அதேபோல் காணாமல் போனவர்களுக்காக காணாமல் போனவர்களின் அமைப்பு மாவட்ட ரீதியாக பல குழுக்கள் இருக்கின்றார்கள் அந்த அமைப்புகளை ஒழுங்குபடுத்தி போராடிவருகிறார்கள் இவ்வாறான அமைப்புகளுடன் நாங்கள் இணைந்துதான் போராடவேண்டும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் கலந்துரையாடித்தான் போராங்கள் செய்யவேண்டும் என்றில்லை.

ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகளின் கூட்டாகவே உள்ளது. அந்தவகையில் நாங்கள் கூட்டாக முடிவை எடுத்திருக்கின்றோம்.

ஆகவே எனைய கட்சிகளுடன் நாங்கள் மனம்விட்டு பேசிவருகிறோம் பேசவும் உள்ளோம்.  நாம் எடுத்த போராட்டம் என்பது தமிழ் மக்களின் விடயம் சார்ந்த்து ஒரு கட்சி சார்ந்தது அல்ல மக்களின் விடயம் நாங்கள் ஏற்பாட்டுகுழுவாக இதனை அறிவித்துள்ளோம்.

நாங்கள் கட்சிகள் ,சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடி அழைப்புகளை விடுத்துள்ளோம் தனித்தனியாகவும் சந்திப்புகளை நடாத்தி போராட்டவிடுக்கவுள்ளோம். ஆகவே இந்தபோராட்டத்திற்கு எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஒருகட்சி வரவில்லை என்றால் அவர்களை போறுத்தது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் இந்த கட்சி நடந்து கொண்டதையும் மக்கள் அறிந்து கொண்டார்கள் இதனையும் அறிந்து கொள்வார்கள் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.