செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை…

சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை…

0 minutes read

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியை பறிக்கும் செயலாகும் எனக்கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்குப் பதிலடியாகச் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.