அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்!

வாஷிங்டன்,
கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ ஏற்கனவே அமெரிக்காவில் கால்பதித்து விட்டது. அதோடு அது வேகமாகவும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் குறைந்தபட்சம் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியூ ஜெர்சி, மேரிலேண்ட், மிசவுரி, நெப்ராஸ்கா, பென்சில்வேனியா, மற்றும் உடா ஆகிய மாகாணங்கள் தங்கள் முதல் ஒமைக்ரான் வகை கொரோனாவை கடந்த வெள்ளியன்று பதிவு செய்தன. தொடர்ந்து, கலிஃபோர்னியா, கொலொராடோ, ஹவாய், மின்னசோடா, மற்றும் நியூயார்க் மாகாணங்களிலும் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்