செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!

யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், தற்போதைய கொரோனா இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் குறித்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 84 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு இந்த உதவித் தொகை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.