செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

1 minutes read

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோவில் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். வழக்கமாக 22 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வந்த நிலையில் நேற்று 29 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வெளிமாநில பக்தர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று 29,621 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,039 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.30 கோடி உண்டியல் வசூலானது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

அந்த பக்தர்கள் ஏராளமானோர் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வந்திருந்தனர். இதனால் திருப்பதியில் நேற்று அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.