செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை | அமித்ஷா

நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை | அமித்ஷா

1 minutes read

நேதாஜி, சர்தார் படேல் போன்ற புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை - அமித்ஷா


தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த தீவுகள் முக்கிய இடமாக விளங்கி இருக்கின்றன. ஏனெனில் 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கேதான் மூவர்ண கொடியை முதன் முதலாக ஏற்றினார். அத்துடன் 1945 வரை 2 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அரசிடம் இருந்து இந்த மண்ணை பாதுகாத்தார்.

ஆனாலும், நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை. புகழ்பெற்ற சில விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

பிரதமர் மோடி

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவியதுடன், நேதாஜியின் பிறந்த தினத்தை ‘வெற்றி தினம்’ ஆகவும் அறிவித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.