செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை!

டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை!

0 minutes read

டெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றுதர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் பல்துறை அலுவலர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதன்பின் பேசிய கோபால் ராய் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி  கட்டுமானப் பணிகளுக்கான தடை நவம்பர் மாதம் 21 வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசுத்துறையினர் வீட்டில் இருந்தே பணியாற்றுவர் எனவும், மறு உத்தரவு வரும் வரை பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றியமையாப் பொருட்கள், பணிகளுக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.