செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து நாளை ஆலோசனை!

தமிழக ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து நாளை ஆலோசனை!

0 minutes read

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதில் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.