செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அவிஷ்கவின் இடத்திற்கு ஜெஹான் முபாரக்

அவிஷ்கவின் இடத்திற்கு ஜெஹான் முபாரக்

0 minutes read

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜெஹான் முபாரக் நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக இருந்துவந்த அவிஷ்க குணவர்தனவுக்கு  இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் புதிய பொறுப்பொன்றை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதன் காரணமாகவே,  அவிஷ்க பெர்னாண்டோவின் வெற்றிடத்திற்கு ஜெஹான்  முபாரக் நியமிக்கவுள்ளதாக ‍தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில் அவிஷ்க குணவர்தனவுக்கு, புதிய பதவியொன்றை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன நிர்வாகக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.