செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆகஸ்ட் 18 வெளியாகும் திருச்சிற்றம்பலம்

ஆகஸ்ட் 18 வெளியாகும் திருச்சிற்றம்பலம்

0 minutes read

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து படக்குழு “உங்கள் ஆடர் தயாராகுகிறது, விரைவில் டெலிவரி செய்யப்படும்” என்று ஒரு போஸ்டரை வெளியிட்டது.

திருசிற்றம் பலம் இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் (7-8-2022) மாலை 7மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.