செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று பரபரப்பை ஏற்படுத்திய விமர்சனம்

2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று பரபரப்பை ஏற்படுத்திய விமர்சனம்

1 minutes read

நானே வருவேன் திரைப்படம் குறித்த முதல் விமர்சனத்தை வெளியிட்ட ஒருவர் 2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்பட்டது. மேலும் நேற்று இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸருக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து என்பவர் இந்த படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் பதிவு பார்த்தேன். தனுஷின் நடிப்பை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். 2022ஆம் ஆண்டு அவருடைய ஆண்டுதான்’ என்று தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More