செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிரின்ஸ் படத்தின் வெளியீடு அறிவிப்பு

பிரின்ஸ் படத்தின் வெளியீடு அறிவிப்பு

1 minutes read

டான் படத்தின் வெற்றிக்கு பின்னர், ‘பிரின்ஸ்’ எனும் திரைப்படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் வெளியான ‘ஜதி ரத்னலு’ பட இயக்குனர் அனுதீப் கே.வி. தான் பிரின்ஸ் படத்தையும் இயக்கி வருகிறார். மேலும், தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் படத்தில் இருந்து ‘பிம்பிலிக்கி பிலாப்பி’, ‘ஜெஸ்ஸிகா’ ஆகிய சிங்கிள் பாடங்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் பிளே லிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது

அதே போல, பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு, பாண்டிச்சேரி, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் ஒன்றுடன் பிரின்ஸ் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப் கே.வி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பிரின்ஸ் படம் தீபாவளி விருந்தாக திரை அரங்கில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால், பிரின்ஸ் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளி வரும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.