செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முதல் பாடலை வெளியிடும் கார்த்தி படக்குழு

முதல் பாடலை வெளியிடும் கார்த்தி படக்குழு

1 minutes read

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார் - கார்த்தி

சர்தார் – கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கார்த்தி

கார்த்தி

‘சர்தார்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.

சர்தார்

சர்தார்

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் போஸ்டருடன் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.