செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் செக்ஸை விளையாட்டாக அங்கீகரிக்கும் முதல் நாடாக ஸ்வீடன்!

செக்ஸை விளையாட்டாக அங்கீகரிக்கும் முதல் நாடாக ஸ்வீடன்!

1 minutes read

செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்தும் முதல் நாடாக ஸ்வீடன் மாறியுள்ளது.

அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் எனக் பெயரிட்டுள்ளது. இந்தப் போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நடத்தப்படவுள்ளது. பல வாரங்கள் இந்தப் போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் போட்டியை நடத்த சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கேற்கும் நபர்கள், தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு மற்றும் சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள். இந்த போட்டியில் கலந்துகொள்ள ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சுவீடனின் இந்தப் போட்டிஅறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More