செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பசறையில் யாசகம் பெற்று வந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

பசறையில் யாசகம் பெற்று வந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

0 minutes read

பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதிக்கு அருகே பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை, உயன்வத்தை – டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது – 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியில் பெண்ணொருவர் இறந்து கிடப்பதாகப் பதுளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பதுளை பொது வைத்தியசாலைக்குப் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த பெண் பதுளை நகரில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சடலத்தைப் பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் இதுவரை முன்வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.