செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மரத்துடன் ஹயஸ் மோதி இளம் தம்பதி சாவு!

மரத்துடன் ஹயஸ் மோதி இளம் தம்பதி சாவு!

0 minutes read

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

படுகாயங்களுடன் அம்புலன்ஸ் வாகனத்தில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 26 வயதுடைய மனைவி இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளம் தம்பதியினர் அனுராதபுரம் – பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.