செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிறந்த சிசுவைக் கொலை செய்து வீசிய கணவன், மனைவி கைது!

பிறந்த சிசுவைக் கொலை செய்து வீசிய கணவன், மனைவி கைது!

0 minutes read

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்குக் கொண்டு வந்து கொன்று வீசிய கணவன், மனைவி ஆகியோரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் முல்லேரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அக்குழந்தையின் தந்தையெனக் கூறப்படும் நபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முல்லேரியா, பண்டார மாவத்தை – களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று (08) இரவு சிசுவைப் பெற்றெடுத்துள்ளதுடன் சிசுவைக் கொலைசெய்து வீதிக்குக் கொண்டு வந்து வீசியுள்ளதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக்கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று குறித்த ஜோடியைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லேரியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.