செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெள்ளவத்தையில் மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு!

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு!

0 minutes read

கொழும்பு, வெள்ளவத்தையில் மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து குறித்த இளைஞர் தவறி விழுந்து சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காகக் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.