சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பதுளை, கண்டி, நுவரெலியா, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.