பறக்கும் தட்டினைப் பயன்படுத்தி எதிர்ப் பொறியியல்முறை மூலம் அடைந்த தொழிநுட்பங்கள் பிலிப் ஜெ.கோசோவின் தகவல்களின் அடிப்படையில் ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்ட பறக்கும் தட்டின் தொழிநுட்பங்களை, முக்கியமாக உந்துவிசை மற்றும் வழிச்செலுத்தும் அமைப்புகளை (navigation system) ஆய்ந்தறியும் நடவடிக்கைகள் முதலில் கலிபோர்னியாவிலுள்ள நோட்டன் விமானப்படைத்தளத்திலும் (Norton Air Force base ) பின்னர் நெவேடா பிரதேசத்திலுள்ள நெல்லிஸ் விமானப்படைத்தளத்திலுமே (Nellis Air Force base ) நடைபெற்றுள்ளன.
கிட்டத்தட்ட 30 வருட ஆராய்ச்சிகளின் பின்னர் 1970 களில், ரொக்கெட் அல்லது ஜெட் இயந்திரங்கள் போன்ற எவ்விதமான பாரம்பரிய உந்துவிசை அமைப்புகள் எதுவுமற்ற பறக்கும் தட்டினை இயங்கவைப்பதிற்கான பொறிமுறைகளைகள் தொடர்பாக பொறியியலாளர்கள் தெளிவான விளக்கத்தினை பெற்றிருந்தார்கள். அதனடிப்படையில் பறக்கும் தட்டானது அதனுள் பிறப்பிக்கப்படும் மின்காந்த அலைகளின் பரம்பலினாலேயே இயக்கத்தை பெறுவதாக அறியப்பட்டது.
மின்காந்த அலைகளை பிறப்பிக்கும் முகமாக பறக்கும் தட்டானது பெருமளவு சக்தியை தன்னகத்தே சேகரித்து வைத்திருக்கும் இயல்பை பெற்றிருந்தது. அதாவது ஒரு பாரிய கொள்ளளவி போன்று தொழிற்பட்டுள்ளது. இம்முறைமூலம் பறக்கும் தட்டு ஏறக்குறைய 7000mph வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை பெற்றிருந்திருக்கும் என கணிக்கப்பட்டது.
இவ்வாறான அதிவேகத்தில் சாதாரண விமானங்களில் பயணிக்கும்போது உள்ளேயிருக்கும் விமானி மிகவலிமையான ஈர்ப்பழுத்த விசையினால் (g-force) மேசமாகப் பாதிக்கப்படுவார். ஆனால் பறக்கும் தட்டினை சுற்றி உருவாகும் மின்காந்த அலைகள் உள்ளேயிருக்கும் வேற்றுக்கிரகவாசி ஈர்ப்பழுத்ததால் பாதிக்கப்படுவதை தடுத்துள்ளது.
வேற்றுக்கிரக வாசிகள் தாங்கள் பிறப்பிக்கும் வீரியமிக்க மின்காந்த அலைகளினுள் தங்களை எவ்வாறு தக்கவைத்து பறக்கும் தட்டினை இயக்கினார்கள் என்பது பலருக்கு ஆச்சரியமளித்தது. வேற்றுக்கிரக வாசிகள் உண்மையில் பறக்கும் தட்டின் விமானிகள் மாத்திரமல்லாமல் அதனுள் பிறப்பிக்கப்படும் மின்னோட்டத்தை தம்மூடு கடத்தக்கூடிய ஒரு மின் கடத்திகளாகவும் தொழிற்பட்டுள்ளார்கள். அவ்வாற்றலால் அவர்களால் பறக்கும் தட்டினுள் பிறப்பிக்கப்படும் வீரியமிக்க மின்காந்த அலைகிளினுள்ளும் தம்மை தக்கவைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் பறக்கும் தட்டின் இயக்கத்திற்கு தேவையான ஒரு பகுதியாக தொழிற்பட்டுள்ளார்கள்.
அவர்கள் மின் கடத்திகளாக தொழிற்படுவதற்கு அவர்களை சுற்றியிருந்த வெளித்தோற்பகுதியே காரணமாக இருந்திருக்கவேண்டும் என்றும் அனுமானிக்கப்பட்டது. இந்தவகையில் பறக்கும்தட்டானது அதில் பயணித்த வேற்று உயிரினங்களின் உடலின் விரிவாக்கமென்றே (The vehicle was simply an extension of their own bodies) கருத்து தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் தட்டின் தொழிநுட்பத்தினூடாக நாம் அடைந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்,
1.உருவ தெளிவாக்கிகள் – இரவுப்பார்வைக் கண்ணாடிகள் (Image intensifiers, which ultimately became “night vision” )
2.லேசர் கருவிகள் (Lasers)
3.இழை ஒளியியல் (Fiber optics)
4.”மூன்றாவது மூளை” – வழிகாட்டல் அமைப்புகள் [“Third Brain” guidance systems (based on the headbands reportedly used by the aliens)]
5.துணிக்கை வீச்சுக்கள் [Particle beams (“Star Wars” antimissle energy weapons)]
6.மின்காந்த உந்துவிசை அமைப்புக்கள் (Electromagnetic propulsion systems)
7.வலிமையான பற்றிப்பிடிக்கும் இழைகள் (Supertenacity fibers)
8.மூலக்கூறு சீராக்கலுக்குட்பட்ட கலப்புலோகங்கள் (Molecular alignment metallic alloys)
9.ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுக்கள் (Integrated circuits and microminiaturization of logic boards)
மேற்கூறிய தகவல்களில் பெருபாலானவற்றை பிலிப் ஜெ.கோசோ R&D கடமையாற்றும்போது ஆய்விற்காக பெற்றுக்கொண்ட ஆவணங்களிலிருந்தே அறிந்துள்ளார். அவர், தான் ஒருபோதும் பறக்கும் தட்டினை நேரடியாக பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் தற்போது நாம் காணும் மர்மமான பறக்கும் பொருட்களில் அமெரிக்க விஞ்ஞானிகளினால் நீண்டகால ஆராய்ச்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டுகளை ஒத்த பொருட்களும் அடங்கியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் 1947 ல் ரொஸ்வெலில் விழுந்ததாக நம்பப்படும் பறக்கும் தட்டும் அதனுள் இருந்த வேற்றுக்கிரக வாசிகளும் பிரபஞ்சத்தின் எப்பகுதியில் இருந்து இங்கே வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? போன்ற கேள்விகள் தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் வேற்றுக்கிரக வாசிகள், ரொஸ்வெல் சம்பவத்திற்கு பின்னரும் பல தடவைகள் பூமிக்கு வந்து சென்றுள்ளதாகவும் அவர்களுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் இரகசிய தொடர்புகள் உண்டு என்றும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவற்றில் மிக முக்கியமானது 1989ம் ஆண்டு ஏரியா 51ம் (Area 51) அதனுடன் இணைந்த ஏரியா S4 ல் பணிபுரிந்த பொப் லாசர் (Bob Lazar) என்ற பௌதீகவியலாளர், ஏரியா 51 ம் S4 வும் அதிசக்தி வாய்ந்த விமானங்களையும் வேற்றுக்கிரவாசிகளிடமிருந்து பெற்ற பறக்கும் தட்டுகளையும் பரிசோதிக்கும் இடமாக உள்ளதென்றும் தானும் இப்பரிசோதனை நடவடிக்கைகளில் பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார் கருத்துக்கள் ஆகும். இவரது கருத்துக்களும் ஆரப்பத்தில் பலத்த சர்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் பின்னர் அமெரிக்க அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.
இக்கருத்துக்கள் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது ஆய்விற்குரிய விடயமாக இருந்தாலும் இவ்விடயங்களில் எதோவுரு உண்மையுண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. பறக்கும்தட்டுகள் மற்றும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரவாசிகள் தொடர்பான விடயங்கள் முடிவற்று விரிந்துகொண்டே செல்கின்றது. இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை தொடர்பான மர்மங்களை மேலும் பல நாட்களுக்கு மூடிவைத்திருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
குறிப்புகள் :
1.The day after Roswell: Col. Philip J. Corso (Ret.)
2.Need to Know – Timothy Good
3.After Disclosure (AD) – Richard M. Dolan and Bryce Zabel
இங்கே குறிப்பிடப்படும் தகவல்களும் அது தொடர்பான அனுமானங்களும் இப்பிரேத பரிசோதனையை மேற்கொண்ட உடற்கூற்றியலாளர்களால் வெளியிடப்பட்ட பிரேதபரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றவை என பிலிப் ஜெ.கோசோ வினால் கூறப்பட்டவை.
நிறைவு பெற்றது..
நன்றி : பதிவுகள் இணையம் | பொ.மனோ