பயணிகளை ஏற்றிச் சென்ற இலண்டன் டபுள் டக்கர் பஸ், அங்குள்ள கடை ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
மேற்கு இலண்டனில் உள்ள மைடா வேலில் சதர்லேண்ட் அவென்யூ சந்திப்பில் உள்ள ஹாரோ வீதியில் செவ்வாய்க்கிழமை 14:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும் அடங்குவார்.
இருப்பினும் காயங்கள் எவருக்கும் பெரியதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.