நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்; தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது, “அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை. ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். அவருக்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே வைத்தியசாலைக்கு வர வைத்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவித்தனர். ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறோம். விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.