செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: 2 கோடிக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்தனர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: 2 கோடிக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்தனர்!

1 minutes read

அமெரிக்காவில் எதிர்வரும் மாதம் (நவம்பர்) 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் என குறிப்பிட்ட சிலர் மாத்திரமே தேர்தல் முன்பு தபால்மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நாளிலேயே வாக்களிக்க முடியும்.

ஆனால், அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

அந்த வகையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது.

பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால்மூலம் வாக்களிக்கின்றனர்.

அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், இதுவரை 2 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 இலட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தபால்மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More