செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டிரம்ப்பின் வெற்றிக்காக எலோன் மஸ்க் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியது!

டிரம்ப்பின் வெற்றிக்காக எலோன் மஸ்க் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியது!

0 minutes read

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் செலவிட்ட தொகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு 200 மில்லியன் டொலர் செலவிட்டதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் பணிகளுக்காக அந்தச் செயற்குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பெருமளவு தொகையை வழங்கியவர் மஸ்க் என்றும் நம்பப்படுகிறது.

முதன்முறை வாக்களிப்பவர்களையும் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களையும் டிரம்ப்புக்கு ஆதரவு வழங்க ஊக்குவிப்பதே செயற்குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.

இதேவேளை, டிரம்ப்பின் வெற்றிக்கு மஸ்க் பணம் மட்டும் செலவிடவில்லை. தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் டிரம்ப்புடன் தோன்றி, தமது ஆதரவைத் தெரிவித்தார். அதன்மூலம் அவரை முன்னுதாரணமாய் கருதும் பல இளைஞர்கள் டிரம்ப்புக்கு ஆதரவளித்ததாக AP செய்தி நிறுவனம் கூறியது.

மேலும், தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிரம்ப் புளோரிடாவில் வெற்றி உரை ஆற்றியபோது, எலோன் மஸ்க்கைப் புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.