1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாளில் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்தப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த தினத்தை ஆண்டு தோறும் ராணுவ தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்தியா ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
ராணுவ தளபதி தல்பீர் சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் வலைதளத்தில் ராணுவ தினத்தை முன்னிட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.