செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்

அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்அதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்

1 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் பல்வேறு வகையிலான கூட்டு முயற்சி தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை கூட்டினார். அந்தக் கூட்டம் குறித்து அதிபர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

அதிபர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச அளவில் பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதல் குறித்து விரிவாக விவாதம் நடைபெற்றது.

மேலும், இராக்கில் ரமாடி நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது குறித்தும் விவாதித்தனர்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் துணையுடன் இராக், சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மேலும் அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டத் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு கவுன்சிலில் இருந்த பாதுகாப்புப் படை பிரதிநிதிகளிடம் ஒபாமா வலியுறுத்தினார்.வெளிநாடுகளில் உருவாகும் பயங்கரவாதக் குழுக்களின் சதித் திட்டங்களை முறியடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

சிரியா, இராக் ஆகிய நாடுகளுக்கு வெளியே இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் ஆதிக்கம் விரிவடையாமல் தடுக்க வேண்டும் என்று ஒபாமா அக்கூட்டத்தில் பேசினார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிதி ஆதாரத்தை முடக்குவது, அவர்களின் பிரசாரத்தை முடக்குவது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஐ.எஸ். பயங்கரவாதிகளை செயலிழக்கச் செய்து, அவர்களை அடியோடு அழிக்க சர்வேதச அளவில் பல்வேறு வகையிலான கூட்டு முயற்சி தேவை.

ஐ.எஸ். எதிர்ப்பில் அமெரிக்கா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அதிபர் ஒபாமா கூறினார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.