செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிப்பு

1 minutes read

அணுசக்தி ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்றியுள்ளதால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படலாம் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அவை கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐ.ஏ.ஈ.ஏ.) சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் அளித்துள்ள வாக்குறுதிகளை ஈரான் அமல்படுத்துவதாக அறிவிக்கப்படலாம். அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷெரீஃப் கூறியதாவது:

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவது, ஈரான் மக்களுக்கும், பிராந்தியத்துக்கும் நன்மை அளிக்கும் செய்தியாகும். பேச்சுவார்த்தை மூலம் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டங்கள் ஆக்கப்பூர்வமானவையே என்று ஈரான் கூறி வந்தாலும், அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து, அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபராக ஹஸன் ரெளஹானி கடந்த 2013-ஆம் ஆண்டு பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து, அணுசக்தி விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காண்பதற்காக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அணு ஆயுதம் தயாரிக்கப் போவதில்லை என்பதை ஈரான் உறுதி செய்வதற்கும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்வதற்குமான அணுசக்தி ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி கையெழுத்தானது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.