செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆப்கானிஸ்தான் நாட்டு தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டு தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி

ஆப்கானிஸ்தான் நாட்டு தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டு தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி

1 minutes read

ஆப்கானிஸ்தான் நாட்டு பாராளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

கடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதமே முடிவடைந்த நிலையில் அங்கு தலிபான்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில் தேர்தலை நடத்துவது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என கருதிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாராளுமன்றத்தை உள்ள நிலையிலேயே நீட்டித்து இயங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், தலைநகர் காபுலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் அஹமத் யூசுப் நுரிஸ்தானி, வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் செலவுகளுக்கு தேவையான நிதியையும், வேட்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பையும் அரசு உரிய நேரத்தில் வழங்கினால் மட்டுமே இந்த தேர்தலை நடத்த இயலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.