சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோர் மட்டுமே இப்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வரும் 29ம் தேதி வெளியிடுகிறது. முதல் பாகத்தின் வெற்றியை போல் இரண்டாம் பாகமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.